தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்!!!

தற்போது நாடெங்கும் தடுப்பூசி செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக முதலாம் தவணை தடுப்பூசி செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு முழுவதும் நிறைந்தது போல காணப்படுகிறது.

இருப்பினும் இரண்டாம் தவணை செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி கட்டாயமாக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்கறிஞர் தகவல் அளித்தார்.

மாநில அரசின் உத்தரவு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது உறுதிப்படுத்த மாநில அரசுகளை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் கூறினார்.

தடுப்பூசி போடாதவர்களால் தான் கொரோனாஉருமாற்றம் அடைவதாக நிபுணர்கள் ஆய்வு தெரிகிறது என்றும் தமிழ்நாடு அரசு கூறியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment