Connect with us

அங்கன்வாடி ஊழியர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!!!

News

அங்கன்வாடி ஊழியர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!!!

521ce2f3937d3ff49e28c0cbcbbf605b

தற்போது நம் தமிழகத்தில் மீண்டும் பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கால் கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.313fd0ae1190896b1d6e1874e6ad4ce7

மேலும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா  தடுப்பூசி போட வேண்டும் என்றும் கூறப்பட்டது. தற்போது  அங்கன்வாடி ஊழியர்களுக்கு 2 தவணை கொரோனா  தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள் கட்டாயம் இரண்டு தவணைகளாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

 அங்கன்வாடி ஊழியர்கள் இரண்டாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள சமூக நலத் துறை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதற்காக அங்கன்வாடி மையங்கள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. செப்டம்பர் ஒன்றாம் தேதியில் அங்கன்வாடி திறக்கப்படுவது ஒட்டி வழிகாட்டு நெறிமுறைகளை சமூகநலத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சூடான சத்துணவு தரவேண்டும் என்றும் சமூக நலத் துறை கூறியுள்ளது. இரண்டு வயது முதல் ஆறு வயதுள்ள குழந்தைகளுக்கு சூடான சத்துணவை சமைத்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top