இன்று கரையை கடக்கின்றது புயல். சென்னைக்கு ஆபத்தா?

வங்க கடலில் உருவான புயல் இன்று கரையை கடக்க இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வங்கக் கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 770 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலைகொண்டு உள்ளதாகவும் இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இன்று மாலை கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த புயல் நகர்ந்து வரும் நிலையில் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக தமிழக கடற்கரை பகுதிகளில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் டிசம்பர் 9 10 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதுவை – ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும் என்பதால் சென்னைக்கு மிக கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதாகவும் அதிகமான மழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சென்னை மாநகராட்சி போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளதால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.