உருவானது மாண்டஸ் புயல்.. எப்போது கரையை கடக்கும்?

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.

அந்த வகையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தது தற்போது புயலாக மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்த புயலுக்கு மாண்டஸ் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

mandas

இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது/ இந்த புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றும் நாளை நள்ளிரவில் அல்லது நாளை மறுநாள் அதிகாலை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகள் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மாநகராட்சி மழையை எதிர் கொள்ள போதுமான நடவடிக்கைகளை எடுத்து உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.