அடித்து வெளுக்கும் கனமழை; தேனி மாவட்ட மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

மஞ்சளார் அணையில் இருந்து மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால்,  ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக மஞ்சளார் அணை பகுதியில் 10.5 சென்டிமீட்டர் மழை அளவு பதிவுவாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்நிலையில், மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து துவங்கி அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியாக ஏற்கனவே இருந்த நிலையில் தற்பொழுது அணைக்கு வரும் நீர் அப்படியே மஞ்சளார் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மேலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அப்படியே மஞ்சளார் ஆற்றில் திறந்து விடப்படும் சூழ்நிலை உள்ளதால் மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதியிலான தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆற்றங்கரை ஓரப் பகுதிகளான கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலகுண்டு, விருவீடு உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறையினர் விடுத்துள்ளனர்.

நேற்று இரவு மஞ்சளார் அணைப் பகுதிகளில் கனமழை பெய்தது. தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக மஞ்சளார் அணைப்பகுதியில் 10.5 சென்டி மீட்டரும், ஆண்டிபட்டியில் 4 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

மேலும் மஞ்சளார் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் அணையில் நீர் இருப்பு 55 அடியாக உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து 90 கன அடியாக உள்ள நிலையில் அணைக்கு வரும் 90 கன அடி உபரி நீரை அப்படியே மஞ்சளார் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment