மீண்டும் சோகம்! மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் பலி!!

நாடு முழுவதும் காத்தாடி, பட்டம் விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே சமயம் இதற்கு பயன்படும் மாஞ்சா நுல்கள் விற்பனை செய்வது பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் காற்றாடியின் மாஞ்சா நூல் 6 வயது சிறுவனின் கழுத்தை அறுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

கர்நாடகா மாநிலம் பெலகாவில் வசித்து வரும் 6 வயது சிறுவன் தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்காக தனது தந்தையுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது திடீரென பறந்து வந்த மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தை அறுத்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த சிறுவன் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்துள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளார்.

சென்னை: விதிகளை மீறி பட்டாசு வெடித்தாக 163 வழக்குகள் பதிவு!!

தற்போது சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், அம்மாநிலத்தில் மாஞ்சா நூலை பயன்படுத்த தடை விதித்த போதிலும், இத்தகைய சம்பவம் நடைப்பெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment