மணப்பாறை நகராட்சி: பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திமுக, அதிமுக!

தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்தான இட ஒதுக்கீடுகள் கூட்டணி கட்சிகளிடையே தீவிரமாக நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று காணப்படுகிறது. அதன்படி திருச்சி மணப்பாறை நகராட்சி தேர்தலில் திமுக, அதிமுகவின் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக போட்டியிடும் 18 வார்டுகளில் சுமார் 12 வார்டுகள் பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். மணப்பாறையில் அதிமுக போட்டியிடும் 26 வார்டுகளில் பெண்கள் 15 வார்டுகளில் பெண்கள் நிற்கின்றனர்.

19 ஆண்டாக நகர திமுக செயலாளராக உள்ள கீதா மைக்கேல்ராஜ் 25 வது வார்டில் போட்டியிடுகிறார். சமீபத்தில் தேமுதிகவில் இருந்து திமுகவில் இணைந்த வழக்கறிஞர் கிருஷ்ணகோபால் 12 வது வார்டில் போட்டியிடுகிறார்.

கடந்த 1996ஆம் ஆண்டு நகராட்சியான மணப்பாறை 1988 முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மணப்பாறை நகராட்சியில் கடந்த 56 ஆண்டுகளாக இதுவரை அதிமுக நகராட்சி தலைவர் பதவியை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் நகராட்சி தலைவர் பதவியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முயற்சியில் அதிமுக, மணப்பாறை நகராட்சி தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment