மானாமதுரை அழகர் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது தினந்தோறும் வீர அழகர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதியுலா செல்வது வழக்கம்.

இந்தாண்டு சித்திரை திருவிழாவிற்காக உற்சவருக்கு இன்று அதிகாலை பதினொரு வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரத்துடன் ஸ்ரீதேவியுடன் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து அர்ச்சகர் கோபி மாதவன் மூலவர் சுந்தரராஜ பெருமாள் என்னும் வீர அழகருக்கும் உற்சவருக்கும் கையில் காப்பை கட்டினார்.

வீர அழகருக்கு விரதமிருக்கம் பக்தர்களும் காப்பு கட்டி கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வீர அழகரை தரிசனம் செய்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை மே.4ம் தேதியும், அழகர் ஆற்றில் இறங்குதல் மே.5ம் தேதியும், நிலாச்சோறு நிகழ்ச்சி மே.6ம் தேதியும் நடைபெற உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.