மாநாடு தலைவலியா இருக்கு என்று சொன்னவருக்கு பதில் கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு!
சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் வெளிவந்தது இந்த திரைப்படத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படம் பலருக்கும் பிடித்திருந்த நிலையில் ஒரு சாதாரண ரசிகர் இப்படம் பற்றி கூறி இருந்த காணொளி சமூக வலைதளங்களில் உலாவருகிறது.
எனக்கு இந்த வருடம் வெளியான படங்களிலே மாநாடுதான் பிடிக்கல தலைவலியா இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை பிரேம்ஜி தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பதிலளித்து பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு எல்லா விமர்சனங்களையும் நாம் சரியான மனநிலையில் எடுத்துக்கொள்ள வேண்டும் பிரேம்!! நல்லதோ கெட்டதோ!! நம்ப பார்க்கத்தான் விமர்சனம் . அடுத்த படம் இவருக்கும் புடிக்குற மாதிரி புரியுற மாதிரி முயற்சி பண்ணுவோம் என கூறியுள்ளார்.
