Connect with us

#BREAKING ஆட்டத்தை ஆரம்பித்த குரங்கு அம்மை; இந்தியாவில் முதல் உயிரிழப்பு – எங்கு தெரியுமா?

monky

செய்திகள்

#BREAKING ஆட்டத்தை ஆரம்பித்த குரங்கு அம்மை; இந்தியாவில் முதல் உயிரிழப்பு – எங்கு தெரியுமா?

இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், இந்தியாவில் முதன் முறையாக கேரளாவில் தான் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

22 வயதான திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதியானது. இந்த இளைஞர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நிலையில், அவரது அறிகுறிகள் குரங்கு அம்மை நோயை ஒத்திருந்ததால் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

அதில் அவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இளைஞருக்கு துபாயில் இருந்த போதே குரங்கு அம்மை தொற்று இருந்ததாகவும், அதனை மறைத்து கேரளா வந்த அவர், நோயின் தாக்கம் அதிகரித்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே கேரளாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட இருவர் கேரளாவில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top