குடிபோதையில் அநாகரீகம்: பெண் மீது சிறுநீர் கழித்தவர் கைது!!

ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விமான பயணிகளில் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தனர். அதே சமயம் சிவில் போக்குவரத்து தொடர்பாக அறிக்கைகளும் வெளியிடப்பட்டு இருந்தது.

அடுத்த 3 மணி நேரத்தில்.. இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில் சங்கர் மிஸ்ராவை கைது செய்ய டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இருப்பினும், மும்மையில் அவரது சொந்த வீட்டில் இல்லையென தெரிகிறது.

தற்போது சங்கர் மிஸ்ரா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அவர் மீது குடிபோதையில் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வது, பெண்களை இழிவு செய்தல், அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு! தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு!!

இதனிடையே அவர் டெல்லி அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது. மேலும், ஏற்கனவே அவர் பணியாற்றிய நிறுவனத்தில் டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.