தேசியக்கொடியை அவமதிப்பது கடுமையான குற்ற தண்டனைக்கு உள்ளானது என்ற நிலையில் சிக்கனை தேசியக்கொடியால் சுத்தம் செய்த ஒரு நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
யூனியன் பிரதேஷ் மாலா தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி என்ற பகுதியில் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை கோழியை சுத்தம் செய்ய பயன்படுத்திய ஒருவர் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனது. இதனை அடுத்து செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் சிக்கன் கடையில் பணி செய்யும் அவர் சிக்கனை சுத்தம் செய்வதற்காக ஒரு துணியை பயன்படுத்தினார். ஆனால் அந்த துணி மூவர்ண கொடியான தேசிய கொடி என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சிக்கன் வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் அதை வீடியோ எடுத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது
காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிக்கன் கடையில் கோழியை தேசிய கொடியால் சுத்தம் செய்த நபரை கைது செய்தனர் இது குறித்த தகவல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் செய்தியாளர்கள் என கூறியதாவது:
நாங்கள் புகாரின் அடிப்படையில் அந்த நபரை பதிவு செய்து, 1971 ஆம் ஆண்டு தேசிய கொடி அவமதிப்பு தடுக்கும் சட்டம் பிரிவு 2 இன் கீழ் அவரை கைது செய்தோம். அந்த நபர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்
பொது இடத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ தேசியக் கொடியை எரித்தல், சிதைத்தல், அவமானப்படுத்துதல், தீட்டுப்படுத்துதல், சிதைத்தல், அழித்தல் அல்லது மிதித்தல் போன்றவற்றைக் கையாளும் தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். அந்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் சிறையில் அடைக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.