பெர்சனல் லோன் வசூலிக்க வந்த வங்கி ஊழியர் மேல் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வியாபாரி!

பர்சனல் லோன் வசூலிக்க வந்த வங்கி ஊழியர்கள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வியாபாரிஒருவர் தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் அங்குள்ள தனியார் வங்கியில் பேர்சனல் லோன் வாங்கி இருந்தார். அவர் சில மாதங்களாக தவணை கட்டாத நிலையில் அவரிடம் பணத்தை வசூல் செய்ய வங்கி அதிகாரிகள் இருவர் அவருடைய வீட்டிற்கு சென்றனர்.

அப்போது வங்கி அதிகாரிகளுக்கும் அந்த வியாபாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை எடுத்து வங்கி அதிகாரிகள் இருவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அந்த வங்கி அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வியாபாரி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து வியாபாரி தலைமறைவாகி விட்டதாகவும் அவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது படுகாயம் இந்த வங்கி அதிகாரிகள் குணமாகி வீடு திரும்பி விட்டதாகவும் அவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.