உலகக்கோப்பை கால்பந்து: ஈரான் தோல்வியை கொண்டாடிய பொதுமக்கள், சுட்டுக்கொன்ற ராணுவம்!

உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான போட்டியில் ஈரான் நாடு தோல்வியடைந்தது.

பொதுவாக ஒரு நாட்டின் அணி தோல்வி அடைந்தால் அந்த நாட்டின் மக்கள் மிகவும் வருத்தத்துடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஈரான் நாட்டு மக்கள் நேற்று ஈரான் நாட்டு அணியின் தோல்வியை கொண்டாடிய நிலையில் ராணுவ ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது என்றும் அதன் காரணமாக ஒருவர் பலியானார் என்றும் கூறப்படுகிறது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் அணிகளுக்கிடையிலான போட்டியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது.

iranஇந்த நிலையில் அமெரிக்காவின் வெற்றியையும் ஈரான் தோல்வியையும் அந்நாட்டு மக்கள் தெருவில் இறங்கி கொண்டாட ஆரம்பித்தனர். கடந்த சில நாட்களாகவே ஈரான் நாட்டின் அரசுக்கு எதிராக பொது மக்கள் போராடி வருகின்றனர் என்பதும் குறிப்பாக ஹிஜாப் விவகாரம் உச்ச கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஈரான் தோல்வியை பொது மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடியதை அடுத்து இராணுவம் இந்த பிரச்சனையில் தலையிட்டது, போராட்டம் நடத்திய பொது மக்களை அடித்து விரட்டிய ராணுவம் ஒரு கட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக பலியானதாகவும் இது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.