லிவிங் டுகெதர்! 35 துண்டுகளாக காதலி.. டெல்லியில் பயங்கரம்..!!

டெல்லியில் லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் 26 வயதான ஷாரதா. இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் பணி புரியும் அமீன் (29) என்பவருடன் ஷாரதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் சோகம்!! குடிபோதையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் பலி!!

நாளடைவில் காதலாக மாற ஒரு கட்டத்தில், தனியாக வீடு எடுத்து லிவ்விங் டு கெதர் வாழ்கை முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இது குறித்து ஷாரதா பெற்றோருக்கு தெரிந்ததால் உறவை துண்டிக்குமாறு அமீனை கண்டித்துள்ளனர்.

இதனால் காதல் ஜோடிகள் டெல்லிக்கு சென்று மீண்டும் வாழ்கையை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன் ஷாரதா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அமீனை வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன் அமீன் ஷாரதாவை கழுத்து நெறித்து கொலை செய்துள்ளார்.

சென்னையில் சோகம்!! குடிபோதையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் பலி!!

பின்னர் சடலத்தை 35 துண்டுகளாக வெட்டி டெல்லி முழுவதும் வீசியுள்ளார். அதே சமயம் ஷாரதாவில் செல்போன் நீண்ட நாட்களாக சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் சம்தேகமடைந்த அவருடைய தந்தை காவல் நிலையில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து அமீனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஷாரதைவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment