தேவர்களுக்கேக் கிடைக்காத பாக்கியம் மனிதர்களுக்கு…!!! ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய பார்வதி தேவி..!

மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் எழுவதே புத்துணர்ச்சி தான். அதிலும் எழுந்து குளித்து விட்டு இறைவனைத் தரிசிப்பதே அலாதி சுகம். அதிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி அதன் உள்ளர்த்தத்தை மனதில் இறுத்தி அதன்படி நடந்து வந்தால் அதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் சக்தி ஆண்டு முழுவதும் நிறைந்து இருக்கும். அதன்படி இன்று மார்கழி 2ம் நாள் (17.12.2022). மாணிக்கவாசகர் அருளிய 2ம் பதிகம் பற்றி பார்ப்போம்.

markali 2 1
markali 2

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் என ஆரம்பிக்கிறார். தோழிகள் இருவர் பேசிக்கொள்வதைப் பற்றிய பாடல் இது. தோழியை எழுப்புகிறார். தோழியை இறைவனை தரிசிக்க வா என்று அழைக்கிறார். இந்தப் பாடலில் அவர் சொல்லியிருக்கும் அழகான விஷயம் நினைத்துப் பார்க்க பார்க்க ஒரு அற்புதமான வரிகள் இந்தப் பாடலில் உள்ளன.

விண்ணோர்கள் வந்து சிவபெருமானை வணங்குகின்றனர். அவர்களுக்கு அனுக்கிரகம் பண்ணனும்னா சுவாமி உடனே வந்தருள மாட்டார். தேவர்களே சிவபெருமானை அடைய வேண்டுமானால் கஷ்டப்பட்டு தவம் செய்தால் தான் அது நடக்கும்.

ஆனால் மானுடர்களுக்கு அப்படி அல்ல. அவர்கள் தேடினாலோ, கூப்பிட்டாலோ ஓடோடி வந்தருள்வாராம்.

பார்வதி தேவி கூட சிவபெருமானை பிரிந்த காலத்தில் மீண்டும் அவர் உடலில் சரி பாதி பெற தவம் செய்து தான் அந்தப் பாக்கியத்தை அடைந்தார். அம்பாளுக்கே இறைவன் அவருக்குரிய தவக்காலத்தைக் கொடுக்கிறார். ஆனால் மனிதர்களுக்கு அப்படி அல்ல.

சீர்காழியில் அவதரித்தவர் ஞானசம்பர். இவருக்கு 3 வயது. தந்தையுடன் போய் குளத்தில் நீராடி விட்டு அமர்ந்து இருக்கிறார். குளத்தில் மூழ்கி மந்திரம் ஜெபிக்கிறார் தந்தை. குளத்தில் மூழ்கிய தந்தை வரவில்லை என குழந்தை அழுதது.

ஆனால் உண்மையிலேயே அவர் குளத்தில் மூழ்கிய தந்தைக்காக அவர் அழவில்லை. அம்மே…அப்பா என இறைவன் வரவில்லையே என நினைத்து அழுதது. அதைப் பார்த்த சிவபெருமான், பார்வதி தேவி இருவரும் குழந்தை நம் வருகைக்காக அழுதுகொண்டுள்ளது.

தேவி…வா நம்முடைய குழந்தைக்குப் பால் புகட்டி விட்டு வரலாம் என்கிறார் சிவபெருமான். உடனே ரிஷபாருடனருடன் பெருமானும், தேவியும் காட்சி தருகின்றனர். அப்போது சிவபெருமான், தேவி உனது அமுதபாலை பொன்கிண்ணத்தில் எடுத்து இந்தக் குழந்தைக்கு ஊட்டு என்கிறார். உடனே தேவி சும்மா கொடுத்தால் குழந்தைக்கு எப்போது ஞானம் வர்றதுன்னு உடனே சிவ ஞானத்தையும் அதில் குழைத்துக் கொடுக்கிறார்.

Gnanasambanthar
Gnanasambanthar

ஞானப்பாலைப் பருகிய ஞானசம்பந்தர் எவ்வளவு ஞானம் பெற்றார் என்பது உங்களுக்கே தெரியும். எத்தனை அற்புதமான பதிகங்களை அருளினார். எவ்வளவு சமயத் தொண்டுகளை ஆற்றினார் என்பதை நாம் அறிவோம்.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? ஞானசம்பந்தப் பெருமான் ஒரே ஒருமுறை தான் அழுதார். அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையா…அதனால் தான் மாணிக்க வாசகர் சொல்கிறார். தேவர்களுக்கேக் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு. அதை நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து இறைவனை சரணாகதி அடைகிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒரே ஒரு முறை உள்ளன்போடு கூப்பிட்டுப் பாருங்கள்…நிச்சயமாக அந்த இறைவன் நமக்கு அருள்புரிவார். நமக்கு வேண்டும் என்கிற வரத்தைத் தந்தருள்வார் என்கிறார். இப்படி எல்லாம் இந்த ஆன்மாக்களை மாணிக்கவாசகர் இந்தப் பாடலில் அழைக்கிறார். தோழியை அழைப்பதால் தோழியை மட்டுமல்ல. நம்மையும் சேர்த்துத் தான் என்பதைப் புரிந்து கொள்ள வெண்டும்.

திருப்பாவை 2 ம் நாளில், வையத்து எனத் தொடங்கும் இந்தப் பாடலை ஆண்டாள் நாச்சியார் அருளியுள்ளார்.

Thiruppavai 2
Thiruppavai 2

இந்தப் பாடலில் நாம் என்னென்ன செய்யணும்….செய்யக்கூடாதுன்னு சொல்கிறார்.

பொதுவாக முறைப்படி தான் நாம் சாமிக்கு வழிபாடு செய்ய வேண்டும். அதுதான் பக்குவநிலை. எப்போதுமே நாம் பக்குவப்பட்ட நிலையை அடைந்த உடன் தான் திருமணம் செய்ய வேண்டும். படிப்பு கூட ஒரு முறைப்படி தான் 1ம் வகுப்பு முதல் டிகிரி வரை படிப்படியாக படிக்க முடியும்.

இதுதான் மேற்படிப்புக்கு உண்டான தகுதியை நமக்குத் தரும். சமையலிலும் முறைப்படி வரிசைப்படி தான் பொருள்களைப் போட்டு செய்ய முடியும். அப்போது தான் அதன் ருசி நமக்குக் கிடைக்கும். அதுதான் பக்குவமான சமையல்.

அது போல தான் பக்தி. அப்போது இதெல்லாம் செய்ய வேண்டும். செய்யக்கூடாதுன்னு சொல்கிறார் ஆண்டாள் நாச்சியார்.

நல்லதைத் தான் நாங்கள் கேட்போம். நல்லவிஷயங்களைத் தான் செய்வோம். நல்லதைத் தான் நினைப்போம். நமது வழிபாடு முறைமைப் படுத்திய இடத்தில் தான் அது பூர்த்தியாகும்.

அதை விடுத்து நமக்குத் தகுந்த விஷயங்களை மட்டும் நாம் செய்து வரக்கூடாது. அதனால் தான் நமது முன்னோர்களும் முறைப்படியே வழிபாடு செய்து வந்தனர். இந்தப் பாடலில் விரதத்தின் போது நாம் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றி அழகாக சொல்லியிருக்கிறார்.

 

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews