நடுரோட்டில் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்.. சிறைக்கு அனுப்பிய போலீஸ்

நடுரோட்டில் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர் மற்றும் அவருடைய நண்பர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்கால இளைஞர்கள் தங்களது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் சில சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக நடுரோட்டில் கொண்டாடினார்.

மிகவும் பிசியான சாலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருந்தபோது அவருடைய நண்பர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வந்தனர். மேலும் இந்த விழாவுக்காக டிஜே ஒருவரும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தார் என்பதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பிறந்தநாள் கொண்டாட்டம் நடு ரோட்டில் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிறந்தநாளை கொண்டாடிய மஜீத் அலி என்பவரும் அவருடைய நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு 5 நாள் சிறை தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிறந்தநாளை நடுரோட்டில் கொண்டாடி பிறந்தநாள் தினத்தன்றே சிறைக்கு தள்ளப்பட்ட இளைஞர்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.