திருட வந்த வட மாநிலத்தவரை அடித்து கொலை செய்த ஊர் மக்கள்!!!

நம் தமிழகத்தில் தினம்தோறும் திருட்டு சம்பவம் நடைபெற்று கொண்டு தான் வருகிறது. இதில் பெரும்பாலும் இளைஞர்கள் ஈடுபடுவது புள்ளிவிவரங்களில் தெரிகிறது. மேலும் தமிழர்களுக்கு எப்போதும் வட மாநிலத்தவர்கள் மீது ஒரு கண்ணு இருக்கும் என்றே கூறலாம்.

ஏனென்றால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஏதாவது அசம்பாவிதங்களில் செயல்படுவார்கள் என்பது போல் பிம்பம் உருவாகியுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் அவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுக் கொண்டுதான் வருகின்றனர்.

அந்த வகையில் திருட வந்த வட மாநிலத்தவரை பிடித்து வைத்து ஊர் மக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கெட்டனமல்லியில் மூதாட்டி வீட்டில் திருட வந்த வட மாநிலத்தவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மூதாட்டி வடவம்மாள் வீட்டில் திருடன் முயன்ற போது மக்கள் பிடித்து அடித்ததில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார், மேலும் இரண்டு பேர் தப்பி ஓடி உள்ளனர். மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட வட மாநிலத்தவர் உடல் பொன்னேரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment