முன்னாள் முதலாளிக்கு உதவிய வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்.. நெகிழ்ச்சியான பதிவு..!

வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர் தனது முன்னாள் முதலாளிக்கு உதவியதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தான் வேலை பார்த்த நிறுவனத்தின் மீதும் அந்த நிறுவனத்தின் முதலாளி மீதும் கோபமாக இருப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் இருந்து வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர் அடுத்த வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருடைய முன்னாள் முதலாளியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதை படித்துப் பார்த்த அவர் ஆச்சரியம் அடைந்தார். தங்களுடைய நிறுவனத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டதாகவும் அந்த பிரச்சனையை உங்களால் சரி செய்து கொடுக்க முடியுமா என்றும் முதலாளி கேட்டிருந்தார். முதலில் தயங்கிய அந்த ஊழியர் அதன் பிறகு பிரச்சினையை தீர்க்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அவர் முதலாளி இடம் என்ன பிரச்சனை என்று கேட்டு அதை சில மணி நேரங்கள் வேலை செய்து பிரச்சனையை தீர்த்துக் கொடுத்தார்.
இதனை அடுத்து அந்த முதலாளி அவருக்கு தனது வாழ்த்துக்களை கூறியதோடு உங்களைப் போன்ற ஒரு நல்ல ஊழியரை இழந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். இருப்பினும் அடுத்த முறை மீண்டும் வேலைக்கு ஆள் எடுக்கும் நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக உங்கள் பெயரை பரிசீலனை செய்வேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பக்கத்தில் அந்த ஊழியர்  நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு அவருடைய எதிர்கால வேலைக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அவரை வேலைக்கு எடுக்கும் நிறுவனம் இந்த குறிப்பை கவனித்துக் கொள்ளும் என்றும் வேலையிலிருந்து நீக்கப்பட்டாலும் முன்னாள் நிறுவனத்திற்கு வேலை செய்த நிறுவனத்திற்கு உதவி செய்யும் மனப்பான்மை இருக்கும் ஊழியர் என்ற மதிப்பும் மரியாதையும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த பதிவுக்கு ஏராளமான ஒரு தங்களது கமெண்ட்களில் அந்த ஊழியர் பெருந்தன்மை குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வேலையிலிருந்து நீக்கப்பட்டாலும் முன்னாள் நிறுவனத்திடம் அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் நல்ல பெயரை பெற்று வைத்திருப்பது அடுத்த வேலையை பெறுவதற்கு எளிதான வழியாக இருக்கும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.