ஓடும் ரயில் முன் தவறி விழுந்த நபர்: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

அர்ஜெண்டினாவில் ஓடும் ரயில் முன் தவறி விழுந்த நபர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.

அர்ஜெண்டினாவில் நடைமேடையில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்ததாக குறப்படுகிறது. அப்போது அவர் எதிர்பாராத விதமாக கால் தவறி தண்டவாளத்தில் திடீரென விழுந்துள்ளார்.

அதே சமயம் ரயில் வந்ததால் அவர் ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓட்டுனரின் திறமையால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

பின்னர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment