சாமி கும்பிட்டு கொண்டிருக்கும்போதே மாரடைப்பில் இறந்த பக்தர்.. கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி

பிரபல கோயில் ஒன்றில் பக்தர் ஒருவர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றில் சாமி கும்பிட இளைஞர் ஒருவர் வந்தார். அவர் கோவில் பிரகாரத்தை சுற்றி அதன்பின் கீழே உட்கார்ந்து தலைவணங்கி சாமி கும்பிட்டார்.

அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அப்படியே மயங்கி விழுந்து விட்டார். இதனை அருகில் இருந்து பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து அவரை அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த சிசிடிவி காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் போதே திடீரென மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.