சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்ப்பில் இருந்து கடந்த மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் வலிமை. தல அஜித் குமாரின் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். வெளியீட்டு தேதி உறுதியானது உடன் தியேட்டர்களில் முன்பாக ரசிகர்கள் டிஜே, மேளதாளம், பாலபிசேகம் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் கொண்டாடினர்.
அதோடு மட்டுமின்றி படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தின் கார் மீதும் ரசிகர்கள் பாலை பீச்சி அடித்தனர். இதனால் ரசிகர்கள் வலிமை படத்தை தியேட்டர்களில் பார்க்கும்போது அவர்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
இவ்வாறு ரசிகர்களுக்கு திருவிழா போல் காணப்பட்ட தியேட்டரில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைதாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கோயம்புத்தூரில் பிப்ரவரி 24ம் தேதி வலிமை வெளியான தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய லட்சுமணன் கைதாகியுள்ளார். குடிபோதையில் ரசிகர்களிடம் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் கூறியுள்ளார்.