பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய ஒருவர் கைது-போலீஸ் விசாரணை;
இந்தியாவில் மிகவும் வலிமையான ஆளும் கட்சியாக திகழ்கிறது பாரதிய ஜனதா கட்சி. மெல்லமெல்ல தமிழகத்திலும் பாஜகவிற்கு ஆதரவு அதிகமாகிக்கொண்டே வருகிறது என்பது தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர்.
அவர்களில் ஒருவர் பிடி பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை தியாகராயர் நகரில் பாஜக தலைமையகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சி அடையாளங்களை வைத்து கர்த்தா என்கிற வினோத்தை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
உடனிருந்தவர்கள் மற்றும் எந்த காரணத்தினால் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக விசாரணை நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
