பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படத்தை வைத்து மிரட்டியவர் கைது!

நம் தமிழ்நாட்டில் பல இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை வைத்து தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தின் விளைவாக பொதுமக்களில் பலரும் தாக்கப்படுகின்றனர்.

ஒரு சில இடங்களில் பொதுமக்களை மிரட்டுகின்றனர். அதே பாணியில் தற்போது பேரூராட்சி அலுவலகத்தில் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி பேரூராட்சி அலுவலகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி படம் வைத்தவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படம் வைத்துவிட்டு அங்குள்ள ஊழியர்களை மிரட்டி சென்றவர் கைது செய்யப்பட்டார். அரசு ஊழியர்களை மிரட்டிய பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் அமைப்பின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பாஸ்கரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாஸ்கரனுடன் வந்த பாஜகவினர் 9 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் ஆலந்துறை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதனை போல் பஞ்சாபில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு குறைவு காரணமாக பாஜகவினர் பல்லடத்தில் போராட்டம் நடத்தி பழக்கடை வியாபாரி தாக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment