என்ன பாத்து குடிகாரன்னு சொல்லுறீயா?… கஞ்சா போதையில் 2 பேரை வெட்டிக்கொன்ற நபர் கைது!

விளாத்திகுளம் அருகே நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் கஞ்சா போதை சைக்கோ ஆசாமி கைது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பூதலப்புரம் கிராமத்தில் ராஜாமணி(68) பொன்னுச்சாமி (50), என்பவரும் மர்ம நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து விளாத்திகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையின் பூதாலபுரம் கிராமத்தை சேர்ந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையான சுப்பையா(52) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர் சுப்பையா போலீஸ் விசாரணையில் கூறுகையில் :

நான் எப்போதும் மது அருந்துவது கிடையாது இந்நிலையில் ராஜாமணி மறைமுகமாக ஒரு முறை என்னை திட்டியதால் எனக்கு அவமானமாக இருந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று போதையில் இருந்த நான் ராஜாமணி வீட்டுக்குச் சென்று ராஜாமணியை சரமாரியாக வெட்டி கொலை செய்தேன் அவ்வப்போது பொன்னுச்சாமி ராஜாமணி உணவு வழங்கி வந்ததால் பொன்னுச்சாமி சரமாரியாக வெட்டி கொலை செய்ததாகவும் வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment