முதுகில் குத்துகிறார் மம்தா! மோடியை முந்திய ஸ்டாலின்!!: சென்னையில் கே.எஸ்.அழகிரி பேட்டி;

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று முதல்வராக காணப்படுகிறார் மம்தா பானர்ஜி. இதனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தொடர்கிறது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி பற்றி காங்கிரஸ் குற்றசாட்டு வைத்துள்ளது.

KS Alagiri TNCC FB 1200 07112020

அதன்படி மம்தா பானர்ஜி முதுகில் குத்துகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டை வைத்துள்ளார். மம்தா பானர்ஜி உட்பட எதிர்க் கட்சித் தலைவர்கள் சிலர் காங்கிரஸை அப்புறப்படுத்த நினைப்பது கண்டிக்கத்தக்கது என்று அழகிரி கூறினார்.

மம்தாவின் செயல்பாடுகள் என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என சிவசேனா தெளிவாக எடுத்துரைப்பதாக கே.எஸ்.அழகிரி கூறினார். நாகலாந்தில் அப்பாவிகள் கொல்லப் பட்ட நிகழ்வு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தோல்வி என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி கொடுத்தார்.

மோடி குறைப்பதற்கு முன்னே பெட்ரோல் டீசல் விலையை மூன்று ரூபாய் தமிழக அரசு குறைத்து விட்டதாக கே.எஸ்.அழகிரி நினைவூட்டி உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment