Connect with us

மம்தா இத்தாலி செல்ல ஒன்றிய அரசு அனுமதி தர மறுப்பு!!

News

மம்தா இத்தாலி செல்ல ஒன்றிய அரசு அனுமதி தர மறுப்பு!!

71c6a46cef5437bb1208045583900684

சில மாதங்களுக்கு முன்பு நம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மேலும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தற்போது மூன்றாம் முறையாக முதல்வராக உள்ளார் மம்தா பானர்ஜி. மேலும் அங்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தில் ஆட்சியை தக்க வைத்துள்ளது திரிணாமுல்  காங்கிரஸ்.a15b0dca0c4c1a7f60a1c10f8b4b385a

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இத்தாலி செல்ல தற்போது ஒன்றிய அரசு அனுமதி தர மறுத்து உள்ளது. மேலும் இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறும் அமைதி மாநாட்டில் பங்கேற்க மம்தா பானர்ஜி அனுமதி கோரியிருந்தார். மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கோரிக்கையை வெளியுறவு துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.

மேலும் ஏற்கனவே மம்தா பானர்ஜி சீனா செல்ல ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது என்று திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி நிர்வாகி பட்டாச்சார்யாய தேவ் கூறியுள்ளார். இத்தாலியில்  நடைபெறும் அமைதி  மாநாட்டில் ஜெர்மனி அதிபர், போப் பிரான்சிஸ், இத்தாலி பிரதமர் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top