Connect with us

திடீரென பின்வாங்கிய மம்தா! தொடரும் குழப்பம்;

Banerjee

செய்திகள்

திடீரென பின்வாங்கிய மம்தா! தொடரும் குழப்பம்;

குடியரசு தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்கட்சிகள் நாளை நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரண்டு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என விரும்புகின்றனர்.இதற்காக டெல்லியில் கடந்த 15ஆம் தேதி எதிர்கட்சித் தலைவர் கூட்டத்தை மம்தா பானர்ஜி கூட்டினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட 16 கட்சிகள் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் பல தேசிய கட்சிகள் சரத்பாவார் பெயரை முன்வைத்தனர். ஆனால் அவர் போட்டியிட மறுத்து விட்டார்.

அதனை தொடர்ந்து தேசிய மாநாடு கட்சித்தலைவரை குடியரசுத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக களமிறக்க மறுத்து வருகிறார். இதனால் எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளர் தேடல் தொடர்கிறது.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக அடுத்தக்கட்ட ஆலோசனை நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சிதலைவர் கூட்டவுள்ளார். இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top