தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் காயத்ரி சங்கர். இவர் 2012 ஆம் ஆண்டில் “18 வயசு” என்றப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தினால் இவர் மிகவும் பிரபலமானவர். அதன் பின்னர், இவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் ,துக்ளக் தர்பார், விக்ரம் படங்களில் காயத்ரி நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியான மாமனிதன் படத்தில் நடித்துள்ளார்.மேலும் படத்தில் 2 குழந்தைக்கு அம்மாவாக, மேக்கப் போடாமல் சற்று உடல் எடையை கூட்டி நடித்தார்.
இயக்குனர் சீனு ராமசாமி,மாமனிதன் படத்தில் காயத்ரி மிகச்சிறப்பாக நடித்திருப்பார். இதற்காக அவருக்கு தேசிய விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என புகழ்ந்துள்ளார்.
தற்போழுது திரையரங்கில் வெற்றி நடை போடும் விக்ரம் படத்திலும் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படத்திலும் குடும்ப கதாபாத்திரத்தில் எளிமையான தோற்றத்தில் நடித்திருப்பார்.
அதிலும் விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது.
இவர் சமீபத்திய Photoshoot-ல் வெறும் கேமராவை தொடைக்கு நடுவே வைத்து வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை தன்பக்கம் திரும்ப அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.