மாமல்லபுரம் கடற்கரை ரூ.50 லட்சத்திற்கு விற்பனை.. அதிர்ச்சி தகவல்

மாமல்லபுரம் கடற்கரையை ரூபாய் 50 லட்சத்திற்கு விற்பனை செய்த நிலையில் அந்த இடத்தில் ரிசார்ட் கட்ட திட்டமிட்டு இருந்த நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை என்பதும் இந்த சிற்பங்களை பார்ப்பதற்காகவே உலகம் முழுவதிலும் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அரசு நிலங்களை போலி பட்டா மற்றும் சர்வே எண் அமைத்து விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்று மாமல்லபுரம் கடற்கரை அருகே உள்ள 40 சென்ட் நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு ரூ.50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இந்த இடத்தை வாங்கிய நபர் அதில் வேலி அமைத்து ஆழ்துளைக்கிணறு போட்டுள்ளார். இந்த இடத்தில் அவர் ரிசார்ட் கட்ட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு சென்று அங்கு வேலி போடப்பட்டிருந்த இடத்தை மீட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இந்தப் பணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து நிலத்தை வாங்கிய நபரிடம் விசாரித்தபோது தான் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த நிலத்தை வாங்கியதாகவும் இந்த நிலம் அரசு நிலம் என்று தனக்கு தெரியாது என்றும் கூறியதாக தெரிகிறது. இந்த மோசடி குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாமல்லபுரம் கடற்கரை அருகே 40 சென்ட் நிலத்தை 50 லட்சத்திற்கு போலியாக ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.