
பொழுதுபோக்கு
சந்திரமுகி 2 படத்தின் வாய்ப்பை தவற விட்ட மலர் டீச்சர்! காரணம் தெரியுமா?
கடந்த 2005 ஆண்டு பி.வாசு இயக்கத்தில் உருவான படம் சந்திரமுகி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல் மற்றும் பிரபு நடித்திருந்தனர். இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார். மேலும் 2005ஆம் ஆண்டில் மிகப்பெரிய ஹிட் படமாக இந்த படம் அமைந்தது.
ரஜினியின் அசத்தலான நடிப்பும் ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பும் சந்திரமுகி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய பலமாக இருந்தது. 700 நாட்களுக்கு மேலாக படம் ஓடி சாதனையை படைத்தது. அதுமட்டுமில்லாமல் 1999-ல் வெளியான படையப்பா படத்தின் வசூலையும் இந்த படம் முறியடித்து.
இதன் தொடர்ச்சியாக சந்திரமுகி 2 படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் பதிலடி கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராகவா லாரன்ஸ் ரஜினியின் முழு அனுமதியோடு இந்த படத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை மீண்டும் வாசு தான் இயக்குகிறார். சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது .அதேபோல அதிகமாக பேசப்படும் நாயகி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பல நடிகைகள் தேர்வு செய்து வருகின்றனர், இந்த படத்தில் மீண்டும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
சந்திரமுகி 2 படத்தில் நடிகை திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் இயக்குனர் வாசு மலையாளத் திரைப்படமான பிரேமம் படத்தில் நடித்த சாய்ப்பல்லவியிடம் கதை கூறியுள்ளாராம், கதை கேட்ட சாய்ப்பல்லவி கதையில் பல மாறுதலை கொண்டுவந்துள்ளார்.மேலும் கிளைமேஸ்ஸை மாற்றி அமைக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
அதனால் கோபமடைந்த வாசு ஒன்றும் கூறாமல் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது, இயக்குனர் வாசு அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர்,அவரின் கதையில் குறை கூறுவது போல மாற்றத்தை கூறியிருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
அனிருத் தான் வேணும் என அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன் படக்குழு! யாரு பார்த்த வேலை இது..
ஆனால் சாய்ப்பல்லவி சிறந்த நடன கலைஞர் மேலும் ஜோதிகாவை போல பெரிய கவர்ச்சியான கண்களும் கொண்டவர் என்பதால் இந்த படத்திற்கு அவரே பொருத்தமானவர் என பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
