ஆதார் போல் மக்கள் ஐடி விரைவில் அறிமுகம்: தமிழக அரசு அறிவிப்பு

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் இன்றியமையாத ஒரு ஆவணமாக இருந்து வருகிறது என்பதும் ஆதார் அட்டையை வைத்து தான் அனைத்து ஆவணங்களும் நிர்ணயம் செய்யப்படுகின்றன என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு, பான் அட்டை, அரசு சலுகை என எல்லாவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஆதார் அட்டை போல் தமிழகத்தில் மக்கள் ஐடி என்ற 12 இலக்க அட்டை வழங்க உள்ளதாக தமிழக அரசிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்க மக்கள் ஐடி என்ற அட்டையை அனைத்து தமிழக மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் இந்த மக்கள் ஐடி சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசால் இந்த மக்கள் ஐடி உருவாக்கப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் இதனை செயல்படுத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்தில் வசிக்கும் வெளியூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் யார் யார் என்பதை அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.