நம் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் பல இடங்களில் குறைபாடுகள் காணப்படுவதாக தகவல் வெளியாகி கொண்டு வருகிறது. இதுபற்றி தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி செய்தியாளர்கள் மத்தியில் பொங்கல் பரிசு தொகுப்பில் குறைபாடுகள் பற்றி மக்கள் கூறும் வீடியோவை காண்பித்தார்.
அதற்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழலில் நேற்றைய தினம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரேஷன் கடையில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பு தரமானதாக காணப்படுகின்றதா? என்பதை ஆய்வு செய்தார்.
இந்த சூழலில் தரமான பொங்கல் பரிசு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பெரும் வரவேற்பு பெற்ற பொங்கல் பரிசு திட்டம் பற்றி சில விசத்தன்மை கருத்துக்களை பரப்புவதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார்.