
தமிழகம்
தலைவர் விஜயகாந்த் அறிவித்த முக்கிய அறிவிப்பு; தேமுதிக தேர்தல் பொறுப்பாளர் நியமனம்!!
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பின்பு தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக திகழ்ந்தது தேமுதிக. அதற்கு பின்பு 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒரு இடங்களில் கூட தேமுதிக வெற்றி பெறவில்லை.
மேலும் தேமுதிகவின் தலைவர் ஆன விஜயகாந்திற்கு தொடர்ந்து உடல்நல குறைவு ஏற்பட்டது. இதுவே கட்சிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்த நிலையில் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சேலம் மாவட்ட தேமுதிக உள்கட்சி அமைப்பு தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக விபி வேலு (கட்சியின் புதுவை செயலாளர்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாநகர தேர்தல் பொறுப்பாளராக கட்சியின் வழக்கறிஞர் அணி துணைச் செயலாளரான எஸ். ஜனார்த்தனன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக பேராசிரியர் எம்.திருப்பதி நியமனம் என கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அனைத்து ஒன்றியங்களில் உள்ள ஒன்றிய ஊராட்சி பூத் கிளை உள்ளிட்ட ஒன்பது கிளை கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜூலை 10ஆம் தேதி முதல் ஜூலை 24ம் தேதி வரை கட்சியின் முதற்கட்ட அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளது.
தேமுதிக இரண்டாம் கட்ட அமைப்பு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நிறுவன தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
