பராமரிப்பு பணி: மே 17, 18ம் தேதிகளில் 6 புறநகர் ரயில்கள் ரத்து..!!

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கும் ரயில் சேவை தொடர்ந்து ரத்து செய்யபட்டு வருகிறது. ஏனெனில் அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விடுமுறை நாட்களில் புறநகர் ரயில் சேவைகள் கடந்த சில வாரங்களாகவே ரத்து செய்யபட்டு வருகின்றன.

இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக மே 17 மற்றும் 18 ஆம் தேதியில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரக்கோணம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மே 17, 18ம் தேதிகளில் 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  1. அரக்கோணத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  2.  திருத்தணியில் இருந்து 10:15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  3. அரக்கோணத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  4. அரக்கோணத்தில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில் செய்யப்பட்டுள்ளது.
  5. திருத்தணியில் இருந்து 12:30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் புறநகர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  6. அரக்கோணத்தில் இருந்து பகல் 1 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் ஒரு ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment