பராமரிப்பு பணி: புறநகர் ரயில் சேவையில் மாற்றம் மற்றும் ரத்து!!!

திடீரென்று புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பராமரிப்பு பணி காரணமாக மே 9 மற்றும் 12, 13 ஆகிய மூன்று தினங்களில் ரயில் சேவையில் மாற்றம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இத்தகைய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் வேளச்சேரியில் இருந்து மே 12ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் இருந்து 8 மற்றும் 12ம் தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் புறநகர் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரக்கோணத்திலிருந்து மே 9, மே 13ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment