Connect with us

ஜெயிலர் படத்தில் நடிக்கும் முக்கிய நட்ஷத்திரங்கள் குறித்து படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட் !

rajinii ti 1 1 1

பொழுதுபோக்கு

ஜெயிலர் படத்தில் நடிக்கும் முக்கிய நட்ஷத்திரங்கள் குறித்து படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட் !

ரஜினிகாந் அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போழுது சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கயுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஆகஸ்ட் 22ஆம் ரஜினி இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்தது.

rajinikanth 2 1 1

அதன் படி சமீபத்தில் ‘22.8.22 – 11:00 AM #Jailer’ என்ற கேப்ஷனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சோசியல் மீடியாவில் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படம் உள்ளது.இந்த போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

சினிமாவை தவிர தற்காப்பிலும் ஆர்வம் காட்டும் சமந்தா! அப்படி என்ன கத்துக்குறாங்க ?

rajini jail

அதையடுத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தமன்னாவின் கேரக்டர் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடிதான் என்றாலும் முழு படத்திலும் ஜோடியாக கூடவே இல்லாமல், சில காட்சிகளில் மட்டுமே நடிக்கும் ஒரு சிறிய வேடத்தில்தான் தமன்னா நடிக்கிறாராம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top