மகிந்த ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓட மாட்டார்-மகன் பரபரப்பு பேட்டி!!

நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் விளைவாக இலங்கையில் தற்போது வரை கலவரம் தீ பிடித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இணையத்தில் சில காட்சிகள் வெளியானது.

அந்த காட்சியில் மகிந்த ராஜபக்சே தப்பி செல்ல முயற்சித்ததாக காணப்பட்டது. இதனால் திரிகோணமலை பகுதியில் பெரும் கலவரம் உருவாகியுள்ளது. மேலும் அவர் நைஜீரியா நாட்டு குடும்பத்தோடு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தது.

குறித்து அவரின் மகன் நமல் ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்படி மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓட மாட்டார் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இலங்கையிலேயே தங்கி அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பார் என்றும் மகன் நமல் ராஜபக்சே தகவல் அளித்தார்.

என் தந்தை பாதுகாப்பாகவும், குடும்பத்துடனும் தொடர்பில் இருப்பதாக AFP செய்தி நிறுவனத்துக்கு நமல் ராஜபக்சே பேட்டி அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment