News
தம்பி அதிபர், அண்ணன் பிரதமர், அண்ணன் மகன் அமைச்சர்: இலங்கையின் குடும்ப அரசியல்
உலகில் பல்வேறு நாடுகளில் குடும்ப அரசியல் இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்தியாவிலும் தமிழகத்திலும் கூட அந்த குற்றச்சாட்டு உள்ளது
இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் முக்கிய பதவிகளை அண்ணன், தம்பி மற்றும் அண்ணன் மகன் ஆகியோர் தற்போது பகிர்ந்துள்ளனர்.
சமீபத்தில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை பிடித்தது
இதனை அடுத்து இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றார். இந்த நிலையில் தற்போது இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
இந்தப் பட்டியலில் இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஏற்கனவே மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய இலங்கையின் அதிபராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பி அதிபராகவும், அண்ணன் பிரதமராகவும், அண்ணன் மகன் அமைச்சராகவும் பதவியில் இருப்பது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
