ஐ.நா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலை.. இந்தியர்களுக்கு கிடைத்த பெருமை!

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக ஐநா தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள தகவல் இந்தியர்களுக்கு பெருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் உலகின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

jaisankarஐநா தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலை புகழ்பெற்ற இந்திய சிற்பி ராம் சுதார் என்பவர் உருவாக்கியுள்ளார். இவர் குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

உலகெங்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக காந்தியின் கொள்கைகள் உலகம் முழுவதும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காக ஐநா தலைமையகத்தில் காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

இன்றைய உலகில் வன்முறை ஆயுத மோதல்கள் ஆகிய செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் காந்தியின் அகிம்சா கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டியது நம்முடைய கடமை என்றும் இது மாதிரி செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

மோதல் சமத்துவமின்மை தவிர்க்க முடியாத நிலையாக இருக்கும் நிலையில் மகாத்மா காந்தி உலகிற்கு கொடுத்த மிகப்பெரிய பாடமான அகிம்சையை புகுத்தி மோதல்களை தீர்க்க முடியும் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.