மஹாசிவராத்திரி ஸ்பெஷல்- சோமநாதர் கோவில், குஜராத்

ae5c5fff9664d120a39f6c32354f1235

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஜோதிர்லிங்க தலம் உள்ளது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் உள்ளது. இந்த ராமேஸ்வரத்தில் நீங்கள் ராமநாதரை பார்க்கலாம். அதைப்போல இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சோமநாதர் கோவில் உள்ளது.

சோமநாதர் கோவிலை பற்றி கேட்டதுமே நமக்கு ஞாபகம் வருவது. கஜினி முகமது இந்தியாவுக்கு படையெடுத்து வந்து சோம்நாத் கோவிலை அழித்து சென்றதுதான்.ஆப்கானிஸ்தான் மன்னன் கஜினி முகமது இந்த கோவிலை முற்றிலும் தரைமட்டமாக்கி இங்கிருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்து சென்றான்.இன்னும் சில மன்னர்களும் இக்கோவில் வந்து படையெடுத்து சென்றுள்ளனர்.

இந்த கோவில் குஜராத் மாநிலம் பிரபாஸ் பதான் என்ற இடத்தில் இருக்கிறது. 6 முறை இக்கோவில் படையெடுப்பால் சேதப்படுத்தப்பட்டு இருந்தாலும் கம்பீரமாக இன்னும் இக்கோவில் திரும்ப திரும்ப கட்டப்பட்டு காட்சி தருகிறது.

இது எப்போது முதன் முதலில் கட்டப்பட்டது என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை ஆனால் அரபிக்கடல் ஓரமாக கபிலா, ஹிரன், சரஸ்வதி ) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோவில் அமைந்துள்ளது.

முதலில் இந்த இடத்தில் பழங்கால கோவில் இருந்துள்ளது. அதே இடத்தில் கி.பி. 649-ம் ஆண்டு அந்த பகுதியை ஆண்டு வந்த யாதவ குல மன்னர் வல்லபாய் பிரமாண்ட கோவிலை கட்டி இருக்கிறார். ஆனால், 725-ம் ஆண்டு சிந்து (பாகிஸ்தான்) பகுதியை ஆண்டு வந்த இஸ்லாமிய அரசின் கவர்னர் அல்ஜுனாபெத் படையெடுத்து வந்து சோமநாதர் கோவிலை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கி விட்டார்.

பிறகு கஜினி முகமது சேதப்படுத்தியது உட்பட 6 முறைக்கும் மேலாக இக்கோவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

1025-ல் கஜினி முகமது படையெடுத்து வந்து ஆலயத்தை தாக்க வந்தார். அப்போது கோவிலில் தங்கம், முத்து, பவளம், ரத்தினம், வெள்ளி என ஏராளமான செல்வங்கள் குவிந்து கிடந்தன.அவனை தடுத்த மக்களை வெட்டி வீழ்த்தினான். அங்கிருந்த சிவலிங்கத்தை சேதப்படுத்தினான்.

பின்னாளில் வந்த சில மன்னர்கள் இக்கோவிலை கட்டினர்

மீண்டும் மீண்டும் சில மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டு அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களால் இடிக்கப்பட்டது. இப்படி 6 முறைக்கும் மேல் இடித்து 

சிதைந்து கிடந்த கோவிலை மீண்டும் கட்ட சர்தார் வல்ல பாய் பட்டேல் மீண்டும் கட்ட உத்தரவிட்டார். ஆனால், மகாத்மா காந்தி கோவிலை அரசு பணத்தில் கட்டக்கூடாது. வேண்டுமானால் பொது மக்களிடம் நிதி திரட்டி கட்டி கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். இதனால் அறக்கட்டளை அமைத்து நிதி திரட்டி மீண்டும் கோவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இதற்குள் மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல் இருவருமே இறந்து விட்டனர். மத்திய மந்திரி கே.எம்.முன்ஷி தலைமையிலான அறக்கட்டளை குழு 1951-ல் கட்டுமான பணியை தொடங்கியது. அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

படிப்படியாக கட்டுமான பணி தொடர்ந்து 44 ஆண்டுகள் நடந்து 1995-ம் ஆண்டுதான் பணி முற்றிலும் நிறைவு பெற்றது. அப்போதைய ஜனாதிபதி 1.1.1995-ம் ஆண்டு கோவிலை திறந்து வைத்தார். 

எத்தனையோ தடைகளை தாண்டி கம்பீரத்துடன் எழுந்து நிற்கிறார் சோமநாதர். இவரை மஹா சிவராத்திரி அன்று வணங்கினால் பொன் பொருள் சேர்க்கைகள், வாழ்க்கை பிரச்சினைகள் ஒரு பக்கம் இருந்து அதற்காக இவரை வேண்டினாலும் எதையும் தாங்கி கொள்ளும் மனப்பக்குவத்தையும் வலிமையையும் இவர் அளிப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.