சிவராத்திரியில் கட்டாயம் விழித்து இருக்க வேண்டிய பூஜை இதுதான்… அதிவிசேஷமானது…. ஏன்னு தெரியுமா?

மாதங்கள் தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி ரொம்பவே விசேஷமானது. இந்த நன்னாளில் 4 கால பூஜை நடக்கிறது. இந்த 4 கால பூஜையில் தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, அம்பிகை வழிபடுறாங்க.

மாசி மாதத்தின் சதுர்த்தசி திதியன்று தான் இந்த மகாசிவராத்திரி வருகிறது. வரும் சனிக்கிழமை (18.02.2023) அன்று மாலை 6.24 மணிக்கு இந்தத் திதி வந்து விடுகிறது. அதனால் அன்று இரவு நாம் கண்விழித்து முழுமையாக அந்தத் திதியில் விரதம் இருக்கிறோம்.

shivarathiri
shivarathiri

17ம் தேதி இரவு எளிய உணவுகளை எடுத்துக் கொண்டு தூங்கி விடலாம். மறுநாள் காலை எழுந்து குளித்ததும் வீட்டில் சிவபெருமான் படம் இருந்தால் வில்வ இலைகள் வைத்து, சந்தனம், குங்குமமிட்டு பூஜை செய்து வழிபடலாம். லிங்கம் வைத்திருப்பவர்களும் இதே போன்று சந்தனம், குங்குமமிட்டு, வில்வ இலைகள் சாற்றி வழிபட வேண்டும்.

அன்றைய தினம் காலையில் சிவபுராணம், திருவாசகம் பாட வேண்டும். 2 வாழைப்பழம், வெத்தலப்பாக்கு வைத்து நைவேத்தியம் செய்தாலே போதும். தேவை எனில் 1 டம்ளர் பால் வைத்துக் கொள்ளுங்கள். முழுமையாக விரதம் இருப்பவர்கள் தண்ணீர் மட்டும் குடிக்கலாம். மற்றவர்கள் அவரவர் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து இருக்கலாம்.

Lingam
Lingam

காலையில் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். மறுநாள் காலை 6 மணி வரை உபவாசம் இருக்க வேண்டும். அன்று இட்லி, இடியாப்பம் என எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மறுநாள் காலை உடனே படுத்துவிடக்கூடாது. அன்று மாலை 6 மணிக்கு சாமி கும்பிட்டு விட்டு அதன்பிறகு சாப்பிட்டதும் தான் படுத்துத் தூங்க வேண்டும்.

இந்த ஆன்மாவானது இறைவனின் வருகைக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் மானுடப்பிறவியின் நோக்கம். அப்படி இறைவன் நம் மனதுக்குள் வரும்போது அவரது வருகையை நாம் விழித்திருந்து வரவேற்க நமக்கு ஒரு பயிற்சி தான் இந்த சிவராத்திரி. இது ஒரு யோகப் பயிற்சி என்றால் மிகையில்லை.

இந்த நாளில் இறைவனின் நாமத்தை சிந்தித்து, இறைவனை மட்டுமே நினைத்து வழிபடும் வழிபாடாக நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்துருக்காங்க.

Sivan
Sivan

உடல்நிலை ஆரோக்கியத்தைப் பொறுத்து இரவில் கண்விழித்து இருக்கலாம். 3ம் காலத்தில் மட்டுமாவது கண்விழித்து அப்போது ஒரு வில்வ இலையாவது வைத்து சுவாமியை வழிபட வேண்டும். முதல் காலத்தில் பிரம்ம தேவர், 2வது காலத்தில் மகாவிஷ்ணு, 3வது காலத்தில் அம்பிகை வழிபடுறாங்க.

அந்தக் காலத்தில் தான் பிரம்மா, விஷ்ணு நடைபெற்ற விவாததத்தில் சிவன் லிங்கோத்பவராக ஜோதி சொரூபமாகக் காட்சியளிக்கிறார். அதனால் தான் இந்தக் காலத்தில் நாம் கண்டிப்பாக வழிபட வேண்டும். அம்பாளே சிவபெருமானை வழிபட்ட காலம் தான் இது. நான்காம் காலத்தில் தேவர், மனிதர்கள்.

இந்த 4 கால பூஜையின் நேரங்கள் என்னன்னு தெரியுமா? முதல் காலம் 7.30, 2வது காலம், 10.30, 3வது காலம் நள்ளிரவு 12, 4வது காலம் அதிகாலை 4.30 மணி என ஆரம்பிக்கிறது.

Shiva 1
Shiva

இந்த நாளில் சிவனை வழிபடுவதால் நோய் நீங்கும், வறுமை நீங்கும், வாழ்க்கையில் நினைத்த காரியம் நினைத்தவாறு நடக்கும். கொடிய தோஷங்கள் எல்லாம் அகலும். அதிலும் சனிப்பிரதோஷத்தில் வருவதால் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்த நாள். தோஷங்களைப் போக்கக்கூடியது தான் பிரதோஷம். கிரக தோஷங்களையும் போக்க வல்லதே சனிப்பிரதோஷம்.

இந்த ஆண்டில் சிவராத்திரி விரதம் இருப்பது நமக்கு டபுள் டமாக்கா. அதாவது இரட்டிப்புப் பலன். அதனால் மறக்காம இந்த சிவராத்திரிக்கு விரதம் இருந்து நீங்க நினைச்ச காரியத்தை நிறைவேற்றுங்க. நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews