Connect with us

தலையை சீவினாலும் கவுகாத்தி செல்லமாட்டேன்!! – எம்.பி காட்டம்…

Capture 24

செய்திகள்

தலையை சீவினாலும் கவுகாத்தி செல்லமாட்டேன்!! – எம்.பி காட்டம்…

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் தலையை சீவினாலும் நான் கவுகாத்தி செல்லமாட்டேன் என காட்டமாக கூறியுள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக 35க்கும் அதிகமான சிவசேனா எம்.ஏக்கள் போர் கொடி தூக்கியுள்ளனர். இதனால் மகாராஷ்டிரா அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நட்சத்திர ஹோட்டலில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் 1400 கோடி நிலம்மோசடி புகார் தொடர்பில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது தொடர்பாக சஞ்சய் ராவுத் தனது டுவிட்டர் பக்கத்தில் மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழலில் சிவசேனா கட்சி பெரிய போர் நடத்தி வருவதாகவும் அமலாக்கத்துறை அனுப்பியுள்ள நோட்டீஸ் தன்னை தடுக்கும் சதி என தெரிவித்துள்ளார்.

மேலும் எனது தலையை சீவினாலும் கவுகாத்தி செல்லமாட்டேன் என கூறியுள்ள சஞ்சய் ராவுத் தன்னை கைது செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top