Entertainment
மகாமுனிக்கு வரலட்சுமி வாழ்த்து
எட்டு வருட இடைவேளைக்கு பின் இயக்குனர் எஸ்.டி சாந்தகுமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மகாமுனி. இவர் ஏற்கனவே மெளனகுரு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளதால் ரசிகர்கள் பலருக்கு இப்படத்தை பார்க்க கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இப்படத்தில் மகாராஜன், முனிநாதன் என்ற இரட்டை வேடத்தில் நடித்து ஆர்யா கலக்கி இருக்கிறார். நான் கடவுள் படத்துக்கு பிறகு மிக சிறப்பானதொரு படமாக ஆர்யாவின் நடிப்புத்திறனை வெளிப்படுத்தக்கூடிய படமாக இது வந்துள்ளது.
இப்படத்தை பலரும் பாராட்டியுள்ள நிலையில் ஆர்யாவின் தோழியும் நடிகையுமான வரலட்சுமியும் இப்படத்தை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
செல்லக்குட்டி ஆர்யாவுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ள வரலட்சுமி படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
