மஹாளய அமாவாசை, கொரோனா தடை -இன்றே குவிந்த பக்தர்கள்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் , சேதுக்கரை உள்ளிட்ட தலங்களில் 15 நாட்கள் சிரார்த்தம், தர்ப்பணம் செய்தல் போன்ற பித்ரு காரியங்களை மஹாளய பட்சம் தொடங்கிய கடந்த 15 நாட்களுக்கு முன்பிருந்தே  தொடர்ந்து செய்து வந்தனர்.

இந்த நிலையில் நாளை 6ம் தேதி மஹாளய அமாவாசை வருவதால் அமாவாசைக்கு புனித நீராடும் இராமேஸ்வரம், சேதுக்கரை உள்ளிட்ட புண்ணியத்தலங்களில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 5.10.2021 மதியம் முதலே கடற்கரை அடைக்கப்படுவதால் நாளைக்கு செய்ய வேண்டிய முன்னோர் காரியத்தை இன்றே பல பக்தர்கள் வெளியூரில் இருந்து வந்து செய்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews