மகாபலிபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில்

69f0cdf71006152803b971132e05c1ec

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் ஒரு அழகிய கடற்கரை பிரதேசம். பல்லவர்கள் கட்டிய சிற்பங்களையும் அத்துடன் கூடிய கோவிலையும் காண இங்கு தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இங்குதான் அழகிய ஸ்தல சயன பெருமாள் கோவில் உள்ளது.ஆழ்வார்களில் இது பூதத்தாழ்வார் அவதாரத்தலம்

இங்குள்ள ஸ்தல சயன பெருமாள் தன் வலக்கரத்தை மார்பின் மீது முத்திரையாக வைத்துள்ளார். 108 திவ்யதேசங்களில் இது 64வது திவ்யதேசம்.ஒரு காலத்தில் இங்கு ஏழு கோவில்கள் இருந்தனவாம், காலப்போக்கில்  கடல் சீற்றத்தினால் அனைத்தும் அழிக்கப்பட்டவுடன் மிஞ்சியது இந்த கோவில் மட்டுமேயாகும்.

14ம் நூற்றாண்டின் விஜய நகர மன்னன் பராங்குசன் மாமல்லபுரம் நகருக்குள் ஆகம விதிப்படி இக்கோவிலை கட்டினான். ஆகம விதிப்படி இங்குள்ள பெருமாளை பிரதிஷ்டை செய்தார்.

இப்பெருமாள் வலது திருக்கரத்தை மார்பின் மீது முத்திரையாக வைத்திருப்பதால் இத்தல இறைவனை தரிசித்தால் அந்த வைகுண்ட நாதனையே தரிசித்த பலன் ஏற்படும்.

புண்டரீக மகரிஷி கடும் சோதனைகளுக்கு பிறகு இறைவனை பெருமாளை தரிசித்த ஸ்தலம் இது. சயன திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தந்ததால் இவர் ஸ்தல சயன பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews