மகா சிவராத்திரி விரதம்!

சகல சௌபாக்கியம் அருளும் மகா சிவராத்திரி விரதம்

சிவனுக்கு உகந்த நாட்களுள் ஒன்றாக சிவராத்திரி கருதப்படுகிறது. மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி  திதியில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று சிறப்பிப்பார்கள். அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவன் பாடல்களை, சுலோகம், நாமங்களை ஜபித்து வணங்குவார்கள்.

மஹாசிவராத்திரி அன்று கண் விழித்து சிவபெருமானை மனதார வணகுங்குபவர்களின் துன்பங்கள் யாவும் விலகும். நமது முன்னோர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் மற்றும் நாம் செய்த தவறுகளைப் போக்குவதற்கு இறைவனை மனதார  இரவு முழுவதும் பிராத்தனை செய்தால் மோட்சம் கிட்டும். சிவபெருமானை மனதார வணங்குபவர்களுக்கு செல்வம், பதவி, கௌரவமும்  கிடைக்கும் என்பது ஐதிகம்.

சிவராத்திரி வழிபாடு முறைகள்:

சிவராத்திரி நன்னாளில் விஷேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். சிவபெருமான் அபிஷேகம் பிரியர் என்பதால் அவருக்கு சிறப்பாக நடைபெறும். தீராத வியாதி, பிரச்சனைகள் இருப்பவர்கள் அன்று இரவு முழுவதும் கண் விழித்து இறைவனை மனதார வணங்கினால் சகல துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

முதல் யாமம்

முதல் யாமத்தின் பொது சிவபெருமானுக்கு பஞ்சகவ்யத்தில்  அபிஷேகம் செய்ய தொடங்குவார்கள். இது எதற்கு செய்கின்றார்கள் என்றால் வியாதிகள், நோய்நொடியுடன் இருப்பவர்கள் அதில் இருந்து விடுபட்டு மக்கள் ஆரோக்கியமாக வாழ  வேண்டும் என்பதற்க்காக இதை செய்வார்கள். சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்வார்கள். தாமரை பூ கொண்டும் அலங்காரம் செய்வார்கள். அவருக்கு நிவேதனமாக பாசிப்பருப்பு கலந்த பொங்கல் படைப்பார்கள். சந்தனக்காப்பு சாத்துவதால் உடலில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் வராமல்  தடுக்கலாம். வெக்கை போன்ற நோய்கள் கால்நடைகளுக்கு வர கூடாது என்றும் சிறப்பு அபிஷேகம் கிராம புறங்களில் செய்வார்கள். இந்த முதல் யாமத்தின் போது ரிக்வேதம் ஓதப்படுகிறது. சிவபுராணம் அன்று படிக்கப்படுகிறது.

 இரண்டாம் யாமம்:                                     

இரண்டாம் யாமத்தின் பொழுது  பால், தயிர், சர்க்கரை, வெண்ணை, பசு நெய் கலந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. இளநீர் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள் அதனால் அதனை வாங்கி தரலாம். சைவமும் வைணவமும் ஒன்றே என்பதை வெளிப்படுத்த துளசி, வில்வம் இலைகள் கொண்டு அலங்காரம் செய்து, அர்ச்சனைகளும் நடைபெறும். பன்னீருடன் பச்சை கற்பூரத்தை கலந்து, அரைத்து காப்பக சாத்தப்படுகிறது. இதனை செய்வதனால் மக்கள் செல்வம் செழிப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இரண்டாம் ஜாமம் பொழுது யஜுர் வேத பாராயணம் செய்யப்படுகிறது. அப்பரின் தேவார பாடல்களை  படிக்கவும் செய்வார்கள். சில கோவில்களில் அதனை பாடல்களாக சிறப்பாக பிராத்தனை செய்வார்கள். நாடு செழிக்க வளமாக இருக்கவும் இந்த இரண்டாம் யாமத்தில் பால், தயிர், சர்க்கரை போன்றவற்றை கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.

மூன்றாம் யாமம்

மூன்றாம் யாமத்தின் பொழுது தேன்  அபிஷேகம் செய்வார்கள். இது மக்களிடையே தேவையில்லாத சண்டை சச்சரவு இருக்காமல்  ஒற்றுமையாக இருக்க இந்த சிறப்பு அபிஷேகம் செய்வார்கள். மல்லிகை பூ மாலை, வில்வம், பச்சைக்கற்பூரம் சாத்துவார்கள். எள் அன்னம் கொண்டு நிவேதனம் செய்வார்கள். மூன்றாம் யாமத்தின் பொழுது சாமவேத  பாராயணமும், மாணிக்கவாசகரின் திருவாசகமும் ஓதப்படும்.

நான்காம் யாமம்:

நான்காம் யாமத்தின் பொழுது கரும்புசாறு, பழசாறு கொண்டு அபிஷேகம் செய்வார்கள். ஒரு சில கோயில்களில் பழங்களில் துண்டுகளாக செய்து அதனை அபிஷேகம் செய்து அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். வாழைப்பழம், மாதுளை, ஆப்பிள், பலாப்பழம் போன்ற பழங்களை  அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகம் செய்தால் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை எல்லாம் விலகும். நான்காம் யாமத்தின் பொழுது நந்தியாவட்டை , நீலோத்பலம், அல்லி, போன்றவற்றால் அலங்காரம் செய்து, சிறப்பு அர்ச்சனைகள் செய்வார்கள். சுத்தமான அன்னத்தை கொண்டு சிறிது நெய் சேர்த்து நிவேதனம் செய்வார்கள். இந்த அன்னத்தை பிரசாதமாக உண்டால் குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும். அதர்வண வேத பாராயணம் செய்வார்கள். சம்பந்தர் பதிகங்கள் பாடல்கள் படிப்பார்கள்.

சிவராத்திரி அன்று விரதம் இருக்கும் முறைகள்:

சிவபெருமானுக்கு மற்ற சிறப்பான நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட சிவராத்திரி அன்று விரதம் இருக்கலாம். விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள் சிவன் ஆலயத்திற்கு சென்று அவரின் நாமம், பாடல்கள் படிக்கலாம். பொதுவாக சிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபட்டால் நினைத்து காரியம் நடைபெறும். இதுவரை வீட்டில் எவ்வித சுப நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பவர்கள் சிவராத்திரி அன்று கண் விழித்து விரதம் இருந்து வழிபட்டால் தடைகள் எல்லாம் நீங்கி மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.

அசைவ உணவுகளை தவிர்த்து விட வேண்டும். சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து பூஜை செய்த பிறகு காலையில் நீராடி சிவனின் ஐந்து  எழுத்து நாமத்தை உச்சரிக்க வேண்டும். “ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை 108 அல்லது 1008 முறை வரை ஜபிக்கலாம். பால், பழங்கள், நீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். காபி, டீ , புளி , காரம் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டும். கோபம், குறை பேசுவது, தீய வார்த்தை, பிறரை தேவையில்லாமல் தகாத வார்த்தைகள் பேசுவது தவிர்த்து விட வேண்டும். முக்கியமாக கோயில்களுக்கு வரும் பொழுது வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தவிர்த்து விட  வேண்டும். மனதார இறைவனை பிராத்தனை செய்தால் சகல யோகங்களும் கிட்டும்.

அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று மாலை நேரம் முதல் யாமத்திலிருந்து  நான்காம் யாமம் வரை கண்ணார கண்டு தரிசிக்க வேண்டும். ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இறைவனை பூஜை செய்து, நிவேதனம் செய்யலாம். முக்கியமாக வில்வம் இலைகள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். ஒரு நாள் முழுக்க  சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் இடைவேளியில் பால், இளநீரை போன்றவற்றை பருகலாம்.

நான்காம் யாமம் வரை விழித்து இருந்து பூஜை செய்த பிறகு 108 முறை சிவ  நாமம் ஜபித்து விரதத்தை முடித்து கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews