இனி புதிதாக ஐந்து கோயில்களில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா.!!

தமிழகத்தில் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப் பட்டது. ஏனென்றால் சட்டப்பேரவையில் இன்று அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அதுவும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. ஏனென்றால் இபிஎஸ் கேட்ட கேள்விக்கு சேகர்பாபு அளித்த பதில் சட்டப்பேரவையை தாண்டி தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வள்ளலார் பெருமானுக்கு முப்பெரும் விழா நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளார். வள்ளலார் பெருமான் 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவித்தார்.

சேக்கிழாரின் பிறந்த தலமான குன்றத்தூரில் அவரது  நட்சத்திரத்தை ஒட்டி மூன்று நாட்கள் அரசு விழா நடைபெறும் என்றும் கூறினார். மேலும் புதிதாக ஐந்து கோயில்களில் ஆண்டுதோறும் மாபெரும் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அதன்படி கபாலீஸ்வரர், பேரூர் பட்டீஸ்வரர், நெல்லையப்பர் கோவில், பிரகதீஸ்வரர் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment