நடிகர் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் சக்கை போடு போட்டு வரும் நிலையில் சிம்பு நடித்து கொண்டிருக்கும் திரைப்படமான ’மாநாடு’ படத்தின் அட்டகாசமான ஸ்டில் ஒன்று இன்று மதியம் வெளியே வந்தது
சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் இருந்த அந்த ஸ்டில்லை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு சிறப்பு பொங்கல் விருந்தாக ’மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது
இந்த மோஷன் போஸ்டர் மாநாடு ஒன்றில் கூட்டத்தின் நடுவே துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு சிம்பு ஸ்டைலாக நிற்கும் காட்சிகள் உள்ளது என்பதும் இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் உருவாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்ஜே சூர்யா உள்பட பல பிரபலங்கள் நடித்து உள்ளனர் என்பதும் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது