மேக்னசைட் தாது கடத்தல்: சேலத்தில் பயங்கரம்!!

சேலம் அருகே மேக்னசைட் தாது கொண்ட வெள்ளை கற்களை நள்ளிரவில் கடத்த முயன்ற போது பாமக இளைஞர்கள் தடுத்து நிறுத்த முயன்றதால் கைகலப்பு ஏற்பட்டது.

சேலம் அடுத்த வெள்ளைக்கல்பட்டி என்ற கிராமத்தில் அதிகளவு மேக்னசைட் தாது கொண்ட வெள்ளை கற்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இவற்றை தனியார் நிறுவனங்கள் குவாரி அமைத்து வெட்டியெடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வெள்ளைக்கற்கள் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக பாமக இளைஞர்கள் தடுப்பதற்காக சென்றனர். அப்போது கடத்தல் காரர்கள் அவர்களை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.

இதில் 4 பேர் காயமடைந்தாக கூறப்படுகிறது. இதனிடையே தாக்குதல் தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.